விக்னேஷ் சிவனின் எல் ஐ சி படத்தில் சீமான்!
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் எல்.ஐ.சி.
இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், நயன்தாரா, க்ரீத்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா நடித்து வருகிறார்கள்.
லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்ற முழு பெயரை கொண்டுள்ள இந்த படத்தை பிரபலமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்து வருகிறது.
இந்நிலையில், இந்த படத்தில் தமிழக அரசியல்வாதியும் நடிகரும் இயக்குனருமான சீமான் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணன் தங்கையாக நடிக்கும் பிரதீப் மற்றும் நயன்தாராவிற்கு அப்பாவாக சீமான் நடிக்கவிருக்கிறாராம். விவசாயம், இயற்கை என பழமை வாய்ந்த அப்பா கேரக்டரில் தான் சீமான் நடிக்கவிருக்கிறார்.