இந்தியன் 2” டிஜிட்டல் உரிமை 220 கோடிக்கு விற்பனை!

 இந்தியன் 2” டிஜிட்டல் உரிமை 220 கோடிக்கு விற்பனை!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “இந்தியன் 2”. படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார், 220 கோடி ரூபாய்க்கு இப்படத்தினை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தினை லைகா நிறுவனத்தோடு இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனமும் தயாரித்து வருகிறது.

 

Related post