வெங்கட் பிரபு இயக்கத்தில்ல் நாக சைதன்யா, அரவிந்த்சாமி, சரத்குமார், ப்ரியாமணி என நட்சத்திர பட்டாளங்கள் இணையும் “NC 22”!!

 வெங்கட் பிரபு இயக்கத்தில்ல் நாக சைதன்யா, அரவிந்த்சாமி, சரத்குமார், ப்ரியாமணி என நட்சத்திர பட்டாளங்கள் இணையும் “NC 22”!!

வெங்கட்பிரபு இயக்கத்தில் அக்கினேனி நாகசைதன்யா நடிக்கும் NC 22 படம் தமிழ்- தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கியது. தற்காலிகமாக NC 22 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்.

நாகசைதன்யா இதுவரை கதாநாயகானாக நடித்துள்ள படங்களில் NC 22 படம்தான் அதிக பொருட்செலவில் உருவாகி வரக்கூடிய ஒன்று என்று தகவல் வெளியாகியுள்ளது.

அரவிந்த்சாமி, சரத்குமார், தேசிய விருது பெற்ற நடிகை ப்ரியாமணி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளனர்.

ப்ரேம்ஜி அமரன், ப்ரேமி விஷ்வானந்த், சம்பத்ராஜ் மற்றும் வெண்ணிலா கிஷோர் ஆகியோரும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ’இசைஞானி’ இளையராஜா மற்றும் ’லிட்டில் மாஸ்ட்ரோ’ யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இந்தப் படத்திற்கு இசையமைக்கின்றனர்.

 

Related post