இந்த வருடத்தில் சிம்புவிற்கு திருமணம்!

 இந்த வருடத்தில் சிம்புவிற்கு திருமணம்!

நடிகர் சிலம்பரசன் தற்போது தனது நடிப்பில் தீவிரம் காட்டி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களின் வெற்றிக்குப் பிறகு மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார் சிம்பு.

தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் பத்து தல படத்தின் படப்பிடிப்பையும் ஒருவழியாக முடித்துக் கொடுத்து விட்டார். வரும் மார்ச் மாதம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில், தான் காதல் திருமணம் செய்யப்போவதில்லை ஆகையால் நீங்களே பெண் பாருங்கள் நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று தனது பெற்றோர்களிடம் சிம்புஜ் கூறிவிட்டாராம்.

அதற்காக, தங்களது ஜாதியிலேயே டி ராஜேந்தர் தீவிரமாக பெண் பார்த்து வருகிறாராம். பெண் கிடைத்துவிட்டால் இந்த வருடத்திலேயே சிம்புவின் திருமணத்தை முடிக்க டி ராஜேந்தர் ப்ளான் செய்துவிட்டாராம்.

 

Related post