வைரலான ”STR 48” பர்ஸ்ட் லுக் போஸ்டர்

 வைரலான ”STR 48” பர்ஸ்ட் லுக் போஸ்டர்

இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க விரைவில் உருவாக இருக்கிறது சிம்புவின் 48வது படம்.

சில மாதங்களாகவே இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. பிரமாண்டமான செலவில் உலகநாயகன் கமல்ஹாசன் இப்படத்தினை தயாரித்து வருகிறார்.

சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை உலக நாயகன் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

ஹீரோவும் நானே வில்லனும் நானே என்ற கோணத்தில் இரு வேடத்தில் இப்படத்தில் நடிக்கவிருக்கிறார் சிம்பு. இப்போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விரைவில் படக்குழு படப்பிடிப்பிற்கு செல்லவிருக்கின்றனர்.

Related post