வெற்றிமாரன் கதையில் சூரி நடிக்கும் “கருடன்”!

 வெற்றிமாரன் கதையில் சூரி நடிக்கும் “கருடன்”!

வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் சூரி. இப்படத்தினைத் தொடர்ந்து வெற்றிமாறன் கதை எழுதும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் சூரி.

இப்படத்தினை துரை செந்தில்குமார் இயக்கவிருக்கிறார். இவர், எதிர் நீச்சல், கொடி, பட்டாசு உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.

படத்திற்கு கருடன் என டைட்டில் வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் உன்னிமுகுந்தன் நடிக்கவிருக்கிறாராம்.

சூரியின் மேனஜர் இப்படத்தினை தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related post