Tags : release

News Tamil News

எலெக்‌ஷன் படத்தினை கைப்பற்றிய சக்தி ஃபிலிம் பேக்டரி

சேத்துமான் படத்தினை இயக்கிய தமிழ் அடுத்ததாக எலெக்‌ஷன் படத்தினை இயக்கியிருக்கிறார். இப்படத்தில், உறியடி விஜய்குமார் நாயகனாக நடிக்க அயோத்தி படத்தில் நடித்திருந்த ப்ரீத்தி அஸ்ரானி ஹீரோயினாக நடித்திருக்கிறார். படத்திற்கு இசையமைத்து வருகிறார் கோவிந்த் வசந்தா. இப்படத்தினை இந்தியா முழுவதும் வெளியிடும் உரிமையை சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. விரைவில் படத்தினை திரைக்குக் கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது.Read More

News Tamil News

மாரி செல்வராஜின் “வாழை”…. முதலில் தியேட்டர் அப்புறம்

மாமன்னன் திரைப்படத்திற்குப் பிறகு, இயக்குனர் மாரி செல்வராஜ் சத்தமே இல்லாமல் வாழை என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். முதலில் நேரடியாக ஓடிடி’யில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது முதலில் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அதன் பிறகே டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படமானது, முழுக்க முழுக்க சிறுவர்களை மையப்படுத்தி கதை சுழல இருக்கிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவிருக்கிறார்.Read More

News Tamil News

குடியிருந்த கோவிலே “குய்கோ”வாக ஆகியிருக்கிறது!

இயக்குனர் அருள் செழியன் இயக்கத்தில் விதார்த், யோகிபாபு, ஸ்ரீ ப்ரியங்கா மற்றும் துர்கா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “குய்கோ”. மூத்த பத்திரிகையாளராக இருந்த அருள் செழியன் அவர்களுக்கு இதுவே முதல் படமாகும். படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் நாளை திரைக்கு வர இருக்கிறது. ஃப்ரீஸர் பாக்ஸை மையம் கொண்டு இப்படத்தின் கதை நகர்கிறது. மேலும், குடியிருந்த கோவில் தலைப்பை சுருக்கி குய்கோ என வைத்திருப்பதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். […]Read More

News Tamil News

லால் சலாம் படத்தைக் கைப்பற்றிய ரெட் ஜெயண்ட்

ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “லால் சலாம்”. இப்படத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஏ ஆர் ரகுமான். லைகா தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம், வரும் பொங்கல் தினத்தன்று வெளியாக இருக்கிறது. இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  Read More

News Tamil News

செப்டம்பர் மாதத்திற்கு படையெடுக்கும் படங்கள்!

வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி பல திரைப்படங்கள் திரையரங்குகளில் படையெடுக்க வருகின்றன. அதில் சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள பரம்பொருள், யோகிபாபுவின் நடிப்பில் உருவாகியுள்ள லக்கிமேன், சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள கிக், தங்கர்பச்சான் நடிப்பில் உருவாகியுள்ள கருமேகங்கள் கலைகின்றன. கன்னடத்தில் ரக்‌ஷித் தெலுங்கில் குஷி உள்ளிட்ட படங்களும் திரைக்கு வர இருக்கின்றன. இந்த அனைத்து படங்களும் போதுமான ப்ரொமோஷனை செய்திருப்பதால், அனைத்து படத்திற்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது. மொத்தமாக 6 படங்கள் இதுவரை செப்டம்பர் 1 ஆம் […]Read More

News Tamil News

வெற்றிமாறனின் “விடுதலை”யை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்!

இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் படம் தான் “விடுதலை”. இப்படத்தினை ஆர் எஸ் இன்போர்டெயின்மெட் நிறுவனம் சார்பில் எல்ரெட்குமார் தயாரித்து வருகிறார். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதி மற்றும் கெளதம் வாசுதேவ் மேனனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். படத்தின் வெளியீட்டு வேலைகளையும் கையோடு பார்த்து வருகிறது தயாரிப்பு நிறுவனம். தற்போது தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் வெளியீட்டு நிறுவனமாக விளங்கி […]Read More