லால் சலாம் படத்தைக் கைப்பற்றிய ரெட் ஜெயண்ட்

 லால் சலாம் படத்தைக் கைப்பற்றிய ரெட் ஜெயண்ட்

ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “லால் சலாம்”.

இப்படத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஏ ஆர் ரகுமான்.

லைகா தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம், வரும் பொங்கல் தினத்தன்று வெளியாக இருக்கிறது.

இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது.

இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

Related post