சின்னக் கலைவாணர் விவேக் சாலை; தமிழக அரசு கொடுத்த கெளரவம்!

தமிழ் சினிமாவில் சின்னக் கலைவாணர் என அழைக்கப்பட்டவர் தான் நடிகர் விவேக். கடந்த வருடம் திடீரென உயிரிழந்ததால் ஒட்டுமொத்த சினிமாவும் அதிர்ச்சிக்குள்ளானது.
அவர் உயிரிழந்து ஒரு வருடம் ஆகிய நிலையில், அவர் வாழ்ந்த வீடு இருக்கும் சாலைக்கு அவரது பெயரை சூட்டுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் விவேக்கின் மனைவியார் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
அதற்கு மறுதினமே, அந்த சாலை சின்னக் கலைவாணர் விவேக் சாலை மாற்றப்படும் என அரசு அறிவிப்பாணை வெளியானது. இன்று சாலைபலகை திறக்கும் விழா நடைபெற்றது.
இந்த சாலை பலகை திறப்பு விழாவில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், சென்னை மேயர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.