தமிழகத்தில் மட்டும் 230 கோடி வசூலை குவித்த “ஜெயிலர்”!

 தமிழகத்தில் மட்டும் 230 கோடி வசூலை குவித்த “ஜெயிலர்”!

சன் பிக்சர் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி திரை கண்ட படம் தான் ஜெயிலர்.

படத்திற்கு அனைத்து தரப்பு ரசிகர்களும் மிகப்பெரும் வரவேற்பைக் கொடுத்த நிலையில், படம் வசூலில் புதிய சாதனையை தொடர்ந்து படைத்து வருகிறது.

இந்நிலையில், இப்படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை சுமார் 230 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வார வசூல் நிலவரத்தை இங்கே பார்த்து விடலாம்…

முதல் வாரம் – 159 கோடி ரூபாய்
இரண்டாவது வாரம் – 42 கோடி ரூபாய்
மூன்றாவது வாரம் – 22 கோடி ரூபாய்
நான்காவது வாரம் – 6 கோடி ரூபாய்

மொத்தமாக இதுவரை தமிழகத்தில் மட்டும் 231 கோடி ரூபாய் வசூலை ஈட்டிக் கொடுத்து தமிழ் சினிமா வசூலில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது ஜெயிலர்.

 

Related post