ஒகேனக்கலில் குளியலாட்டம் போட்ட விக்ரம்

 ஒகேனக்கலில் குளியலாட்டம் போட்ட விக்ரம்

சீயான் விக்ரம் நடிக்க பா ரஞ்சித் இயக்க உருவாகி வரும் திரைப்படம் தான் “தங்கலான்”. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மதுரைக்கு அருகே நடைபெற்றது.

இப்படத்திற்காக தனது தலைமுடியில் சிறிது மாற்றம் செய்து வித்தியாசமான தோற்றத்தில் இருந்து வருகிறார் விக்ரம்.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஒகேனக்கலில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு முடிந்ததும் விக்ரம் மற்றும் பா ரஞ்சித் உடன் அவர்களது நண்பர்கள் ஓகேனக்கல் அருவியில் குளிக்கும் வீடியோ ஒன்றை விக்ரம் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், ‘ இன்று ஒகேனக்கல் அருகில் தங்கலான் படப்பிடிப்பு.கடினமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. தண்ணீர் வா வா என்று அழைத்தது.‘Pack-up’ என்று கேட்டதும் ஒரே குதி.. தண்ணீரில். என் நண்பர்களை விடுவேனா என்ன?!அய்யோ வேண்டாம் என்று பதறிய சிலர் கடைசியல் தண்ணீரை விட்டு வர மறுத்துதான் மிச்சம்.” என்று கூறியுள்ளார்.

 

Spread the love

Related post