வருகிறது துணிவு படத்தின் முதல் பாடல்… “சில்லா… சில்லா….”!

 வருகிறது துணிவு படத்தின் முதல் பாடல்… “சில்லா… சில்லா….”!

ஹச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் “துணிவு”.

மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி உள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

வரும் பொங்கலுக்கு இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

இதையொட்டி படத்தின் புரொமோஷன் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. துணிவு படத்தின் புகைப்படங்கள் நேற்று இணையத்தில் வெளியாகி பெரும் வைரலானது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து ‘சில்லா சில்லா’ என்ற முதல் பாடலை வருகிற டிச., 9ம் தேதி வெளியிடுகின்றனர்.

இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related post