நாளை வெளியாகிறது விக்ரமின் “தங்கலான்” டீசர்!

 நாளை வெளியாகிறது விக்ரமின் “தங்கலான்” டீசர்!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் “தங்கலான்”.

இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார். ஜி வி பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில், விக்ரமின் தோற்றம் அனைவரையும் வெகுவாக கவர்ந்து இழுத்திருப்பதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

படத்தின் டீசர் நாளை மாலை 7 மணியளவில் வெளியாக இருக்கிறது. டீசருக்கு ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

படத்தினை வரும் ஜனவரி மாதம் 26ஆம் தேதி வெளியாகும் எனவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

 

Related post