தமிழகத்தில் எடுக்கப்பட்ட குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது!

 தமிழகத்தில் எடுக்கப்பட்ட குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது!

2023 ஆம் ஆண்டிற்கான 95வது ஆஸ்கர் விருது விழா மார்ச் 13 ஆம் தேதியான இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

இவ்விழாவில் சிறந்த டாகுமென்டரி குறும்படப் பிரிவில் ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட முதுமலை யானைகள் சரணாலய தம்பதிகள் குறித்த ஆவணப்படமான ”தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்” படத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள ஆசியாவின் பெரிய யானைகள் முகாமான தெப்பக்காட்டில், காட்டு நாயக்கர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதி யானை பராமரிப்பாளர்களாக பணிபுரிகின்றனர்.

யானைகளை பராமரிக்கும் தம்பதியின் கதையைக் கொண்ட படம் தான் ”தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்” என்ற குறு ஆவணப்படம். நெட்பிளிக்ஸில் வெளியிடப்பட்ட இந்த ஆவணப்படத்தை கார்த்தி கொன்சால்வ்ஸ் இயக்கியிருக்கிறார். குனீத்மோங்கா தயாரித்திருக்கிறார்.

 

Spread the love

Related post

You cannot copy content of this page