படு கவர்ச்சியில் யாஷிகா, தேவதையாக தமன்னா – “தி லெஜண்ட்” நிகழ்வு ஹைலைட்ஸ்!!
இயக்குனர்கள் ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் சுமார் 200 கோடி செலவில் சென்னை சரவணா ஸ்டோர்ஸின் ஓனர் “லெஜண்ட்” சரவணன் நடித்திருக்கும் படம் தான் “தி லெஜண்ட்”.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில், தமிழ் சினிமாவின் முக்கிய நாயகிகள் பலர் கலந்து கொண்டனர். படு கவர்ச்சியாக யாஷிகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும், தமன்னா, ஹன்சிகா, ஸ்ரத்தா ஸ்ரீநாத், பூஜா ஹெக்டே உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும், பிரபு, நாசர், சிங்கம் புலி, மயில் சாமி, ரோபோ ஷங்கர், விஜயகுமார் உள்ளிட்ட பிரபலங்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சுமார் ஐந்து மொழிகளில் வெளியாகும் இப்படத்த, ஒவ்வொரு மொழிகளுக்குமான ட்ரெய்லர் மேடையில் வெளியிடப்பட்டது.
இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஹாரீஷ் ஜெயராஜ்.