தி லெஜண்ட் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?

 தி லெஜண்ட் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?

இயக்குனர்கள் ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் தொழிலதிபர் சரவணன் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வெளியாகியிருக்கும் படம் தான் “தி லெஜண்ட்”.

ஹேரீஷ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனைவரிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

படம் நேற்று உலகம் முழுவதும் சுமார் 2500 திரையரங்குகளில் வெளியானது.

பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே வெளியான இத்திரைப்படம், அனைவரையும் ஏமாற்றியது.

விமர்சன ரீதியாகவும் பெரும் தோல்வியை சந்தித்தது ” தி லெஜண்ட்”.

தமிழகம் முழுவதும் நேற்று ஒருநாளில் மட்டும் 1.5 கோடி ரூபாய் வசூல் மட்டுமே ஈட்டியுள்ளது. உலகம் முழுவதும் மொத்தமாக 2 கோடி வசூலை மட்டும் கொடுத்து பெரும் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது “தி லெஜண்ட்” என்பது தான் நிதர்சனமான உண்மை.

 

Related post