ஹாலிவுட் படத்திற்கு இணையாக துணிவு ப்ரொமோஷன்; களத்தில் இறங்கிய படக்குழு!

 ஹாலிவுட் படத்திற்கு இணையாக துணிவு ப்ரொமோஷன்; களத்தில் இறங்கிய படக்குழு!

இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் துணிவு. வரும் பொங்கல் தின கொண்டாட்டமாக திரைக்கு வர இருக்கிறது.

படத்தின் பாடல்களும் வெளியாகி அனைவரிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஓவர்சீஸ் உரிமையைக் கைப்பற்றியுள்ள லைகா நிறுவனம் ப்ரோமோஷன் பணிகளில் இறங்கியுள்ளது.

அதன்படி, துபாயில் விமானத்தில் இருந்து குதித்து வானத்தில் ஸ்கை டைவிங்க் குழுவினரால் அந்தரத்தில் துணிவு பட போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ஹாலிவுட் படங்களுக்கு இணையாக துணிவு படத்தின் ப்ரோமஷன் பணிகளை துவக்கியுள்ளனர் படக்குழுவினர்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. அடுத்தடுத்த ப்ரோமோஷன் பணிகளிலும் படக்குழுவினர் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.

 

Related post