விஜய் அரசியலுக்கு வருவாரா.? – அவரது தாயார் ஷோபனா அளித்த பதில்!

 விஜய் அரசியலுக்கு வருவாரா.? – அவரது தாயார் ஷோபனா அளித்த பதில்!

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் வாரிசு. வரும் பொங்கல் தின கொண்டாட்டமாக திரைக்கு வர இருக்கிறது.

இதன் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்நிலையில், வாரிசு திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைய விஜய்யின் தாயாரான ஷோபா, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தார்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஷோபா, ‘என் மகன் நடித்து வெளிவர உள்ள வாரிசு படம் வெற்றி பெற வேண்டும் என கடவுளை பிரார்த்தித்துக் கொண்டேன்.

அதேபோல் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் எனவும் காமாட்சியம்மன் வேண்டி கொண்டேன். நன்றாக காமாட்சி அம்மனின் அபிஷேகம் தரிசனம் ஆகியவற்றை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளேன். விஜய் அரசியல் வருவது பற்றியோ, வாரிசு படத்தில் விஜயின் கேரக்டர் எப்படி இருக்கிறது என்பது பற்றியோ எனக்கு தெரியாது” எனக் கூறினார்.

 

Related post