பர்ஸ்ட் லுக் கூட இல்லை.. ஆனா பிசினஸ் பல கோடி; விஸ்வரூபத்தில் விடாமுயற்சி!
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன் நடிக்க உருவாகி வருகிறது விடா முயற்சி.
வெளிநாடுகளில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் போஸ்டரோ, வீடியோவோ என எதுவும் வெளியாகாத நிலையில், படத்தின் பிஸினஸ் பல கோடிகளுக்கு நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் விடாமுயற்சி படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி நிறுவனமும் ஓடிடி உரிமத்தை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனமும் பல கோடிகள் கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் இசை உரிமத்தை சோனி நிறுவனம் கைப்பற்றியிருக்கிறதாம்.