அல்லு அர்ஜூன் ஜோடியாகிறார் த்ரிஷா!?

 அல்லு அர்ஜூன் ஜோடியாகிறார் த்ரிஷா!?

ஜவான் படத்திற்குப் பிறகு இயக்குனர் அட்லீ, அடுத்தபடத்திற்கான பணிகளில் தீவிரமாக இருந்து வருகிறார்.

அடுத்த படத்தில் அல்லு அர்ஜூன் நாயகனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 8ஆம் தேதி இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில், அல்லு அர்ஜூன் ஜோடியாக நாயகி த்ரிஷா நடிக்கவிருப்பதாகவும், படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருப்பதாகவும் தெரிகிறது.

மேலும், அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவிருக்கிறாராம்.

 

Related post