வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

 வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், படத்தின் மூலம் எண்ட்ரீ கொடுக்கவிருக்கிறார் வைகைப்புயல் வடிவேலு.

இப்படத்தினைத் தொடர்ந்து மாமன்னன், சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இந்த படத்தை பெரிய பட்ஜெட்டில் லைகா தயாரித்து வருகிறது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடிகை ஷிவாணி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி இப்படம் வரும் நவம்பர் 11-ஆம் தேதி திரையரங்கில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

 

Related post