சூப்பர் ஸ்டாரின் இல்லம் தேடி சென்று ஆசி வழங்கிய ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகள்!

 சூப்பர் ஸ்டாரின் இல்லம் தேடி சென்று ஆசி வழங்கிய ஸ்ரீ  கிருஷ்ணப்ரேமி சுவாமிகள்!

தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக இன்றளவும் உயர்ந்து நிற்பவர் நடிகர் ரஜினிகாந்த்.

ஆன்மிகத்தில் மிகவும் நாட்டமுள்ளவரான ரஜினிகாந்த், அவ்வப்போது ஆன்மிக சுற்றுப் பயணமும் மேற்கொள்வார்.

இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது தற்போது படுவேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ரஜினிகாந்தின் வீட்டிற்கு பன்னூர் மகாத்மா என அழைக்கப்படும் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் தலைவர் நேற்று ரஜினியின் வீட்டுக்கு வருகை புரிந்தார்.

அப்போது ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி தலைவருக்கு ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பாத பூஜை செய்தார்கள். இதன் பிறகு சுவாமிகள் ரஜினிக்கு ஆசி வழங்கினார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

 

Related post