அட்லீ தயாரிக்கும் பேபி ஜான்!

 அட்லீ தயாரிக்கும் பேபி ஜான்!

வருண் தவானின் 18வது படமாக உருவாகி வருகிறது பேபி ஜான். இப்படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

இப்படத்தை இயக்குனர் அட்லீ தயாரித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் இப்படத்தின் பூஜையானது மிகவும் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.

இந்நிலையில், படத்தின் டைட்டில் நேற்று வெளியாகியிருக்கிறது. மேலும், இப்படத்தில் வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், பி. எஸ். அவினாஷ் எனப் பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் மூலம் ஹீரோயினாக கால் பதிக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

கீ என்ற படத்தை இயக்கிய காளீஸ் இப்படத்தை இயக்கி வருகிறார்.

Related post