விஜய் சேதுபதி படத்தை தயாரிக்கும் அட்லீ!?

 விஜய் சேதுபதி படத்தை தயாரிக்கும் அட்லீ!?

ஜவான் படத்திற்குப் பிறகு தனது அடுத்த படத்தின் ஆரம்ப கட்டத்தில் இருந்து வருகிறார் இயக்குனர் அட்லீ.

கையோடு தனது தயாரிப்பு படத்தின் பணிகளையும் கவனித்து வருகிறார் அட்லீ.

இந்நிலையில், தனது அடுத்த தயாரிப்பாக விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை தயாரிக்க முடிவெடுத்துள்ளாராம் இயக்குனர் அட்லீ.

இந்த படத்தினை பாலாஜி தரணிதரன் இயக்கவிருக்கிறாராம். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தினை இயக்கியிருந்த பாலாஜி தரணிதரன், இப்படத்தின் மூலம் மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணையவிருக்கிறார்.

விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related post