விஜய்யின் கடைசி படத்தை அட்லீ தான் இயக்குகிறாராம்!?

 விஜய்யின் கடைசி படத்தை அட்லீ தான் இயக்குகிறாராம்!?

டிகர் விஜய் தற்போது நடித்து வரும் தனது 68வது படமான கோட் படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக இருந்து வருகிறார்.

இப்படத்தினைத் தொடர்ந்து தான் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவிருப்பதாகவும், அதன்பிறகு தான் முழு நேர அரசியலில் ஈடுபட போவதாகவும் அறிவித்திருந்தார் நடிகர் விஜய்.

இதனைத் தொடர்ந்து விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போகும் அந்த இயக்குனர் யார் என்ற கேள்வி கோலிவுட்டை துளைத்துக் கொண்டிருந்தது.

அதற்கு விடை கிடைக்கும் விதமாக, விஜய்யின் அடுத்த படத்தை அட்லீ தான் இயக்கப்போகிறார் என்ற செய்தி கிடைத்திருக்கிறது.

ஆம், விஜய்யின் 69வது படமாவது முழுக்க முழுக்க அரசியலை மையப்படுத்தி மிக பிரமாண்டமான பொருட்செலவில் உருவாக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. அட்லீ கதைக்கான ஆரம்ப பணிகளை துவக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Related post