100 கோடி ரூபாயை வாரி எடுத்த “வாத்தி”!

 100 கோடி ரூபாயை வாரி எடுத்த “வாத்தி”!

இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிக்க வெளிவந்த திரைப்படம் தான் வாத்தி.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் நேரடியாக வெளியானது. விமர்சன ரீதியாக இப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தத் துவங்கியது.

தொடர்ந்து சில நாட்களாக அரங்குகள் நிறைந்த காட்சிகளாக வாத்தி திரைப்படம் ஓடிக் கொண்டிருந்தது.

தனித்துவமான கதை படத்தின் வெற்றிக்கு பெரிதாகவே கைகொடுத்தது.

இந்நிலையில், இதுவரை வாத்தி திரைப்படம் திரையரங்குகளின் வாயிலாக மட்டும் சுமார் 100 கோடி ரூபாய் வசூலை தந்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனை தனுஷ் ரசிகர்கள் இணையத்தில் பெரும் வைரலாக்கிக் கொண்டாடி வருகின்றனர்.

 

Related post