ப்ளீஸ் உட்காருங்க… ரசிகர்கள் கூட்டத்தில் அஜித்தின் குரல்!
அஜித் நடிக்க மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பு அர்ஜூன், த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திரங்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் அஜித்தை அவரது ரசிகர்கள் சந்தித்துள்ளனர். அப்போது, அஜித் ப்ளீஸ் உட்காருங்க என்று ரசிகர்கள் அனைவரையும் இருக்கையில் அமர வைத்து பேசியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.
யாராக இருந்தாலும் உட்கார்ந்து பேச வேண்டும் என்ற மாமன்னன் வசனங்கள் சில மாதங்களுக்கு முன் வைரலானது குறிப்பிடத்தக்கது.