இழுத்தடிக்கும் வெற்றிமாறன்; அடுத்த ஆண்டிற்கு தள்ளிச் செல்லும் “விடுதலை 2”!

 இழுத்தடிக்கும் வெற்றிமாறன்; அடுத்த ஆண்டிற்கு தள்ளிச் செல்லும் “விடுதலை 2”!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த மார்ச் 31ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் “விடுதலை பாகம் 1”.

இப்படம், திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ஓடிடி தளத்திலும் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.

இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பினை கிட்டத்தட்ட முடித்துவிட்டதாகவும் 20% படப்பிடிப்பு மட்டுமே மீதம் எடுக்கவிருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இந்நிலையில், இரண்டாம் பாகத்திற்காக 40% படப்பிடிப்பு மீதம் இருப்பதாக கூறி இழுத்தடித்திருக்கிறார் வெற்றிமாறன். முதல் பாகம் கொடுத்த வெற்றியின் காரணமாக கதையில் மாற்றம் செய்திருக்கிறாராம் வெற்றிமாறன்.

தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் படப்பிடிப்பினை துவக்கியிருக்கிறார் வெற்றிமாறன்..

இவரின் இந்த தாமதத்தால் இந்த வருட இறுதியில் வெளியாக இருந்த விடுதலை பாகம் 2, அடுத்த வருடம் தள்ளிச் செல்கிறது.

 

Related post