இரவோடு இரவாக தாய்லாந்து புறப்பட்ட விஜய்!

 இரவோடு இரவாக தாய்லாந்து புறப்பட்ட விஜய்!

நேற்று முன் தினம் லியோ படத்தின் வெற்றி விழாவை வெற்றிகரமாக முடித்த விஜய், தனது அடுத்த படமான தளபதி 68 படத்தின் படப்பிடிப்பிற்காக இரவோடு இரவாக தாய்லாந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

நேற்று இரவு விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டத்தை நேரில் சென்று பார்த்து உடல் நலம் விசாரித்த விஜய், அங்கிருந்து அப்படியே விமான நிலையம் வந்தடைந்தார்.

அங்கிருந்து தாய்லாந்து சென்றிருக்கிறார். முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு விஜய் வந்திருந்தார்.

தளபதி 68 படத்தினை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Spread the love

Related post