விஜய்யின் கல்வி விருது விழா; 2 கோடி ரூபாய் செலவு!

 விஜய்யின் கல்வி விருது விழா; 2 கோடி ரூபாய் செலவு!

நடிகர் விஜய் இன்று பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் ஒன்றியம் வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை சந்திக்கிறார்.

அவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்குகிறார். சென்னை நீலாங்கரையில் ஒரு மிகப்பெரும் கன்வென்ஷன் செண்டர் ஒன்றில் இந்நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

இந்த கன்வென்ஷன் செண்டரின் ஒருநாள் வாடகை சுமார் 40 லட்சம் ஆகும். அதுமட்டுமல்லாமல், மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தங்குவதற்காக ஒரு மண்டபத்தையும் தயார் செய்திருக்கின்றனர்.

இவர்களுக்கான உணவு அனைத்தையும் சேர்த்து இந்நிகழ்ச்சிக்காக மட்டும் சுமார் 2 கோடி வரை விஜய் செலவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Related post