விஷ்ணு வர்தன் இயக்கத்தில் சல்மான் கான்!
அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் விஷ்ணு வர்தன்.
இவர் தற்போது பாலிவுட்டில் மிகவும் பிஸியாக வலம் வருகிறார். இவர் அடுத்ததாக சல்மான்கானை வைத்து இயக்கவிருக்கிறார்.
சல்மான்கானுக்கு ஹீரோயினாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம். படத்திற்கு THE BULL என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாம்.
கரண் ஜோகர் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறார். விரைவில் படப்பிடிப்பினை துவங்க இருக்கிறது படக்குழு.