யஷ் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குபவர் இவரா.?

 யஷ் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குபவர் இவரா.?

கன்னட நடிகர் யஷ் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரும் ஹிட் அடித்த திரைப்படம் தான் கே ஜி எஃப்.

முதல் பாகம் கொடுத்த வெற்றியைக் கொண்டு அடுத்த பாகமும் வெளியானது. யாரும் எதிர்பார்க்கா வண்ணம் அடுத்த பாகம் சுமார் 1000 கோடிக்கும் மேல் வசூலை வாரிக் குவித்தது.

இந்நிலையில், சிறிது நாட்கள் ஓய்வில் இருந்து வந்த யஷ், தனது அடுத்த படத்திற்கான கதை கேட்கும் பணிகளில் இருந்து வருகிறார்.

அதில், மலையாள இயக்குனர் கீதுமோகன் தாஸ் இயக்கத்தில் யஷ் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம், இவர் தேசிய விருது பெற்ற இயக்குனர் ஆவார். மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த மூதோன் என்ற படத்தினை இயக்கியவர் இவர் தான்.

இவரது இயக்கத்தில் தான் யஷ் நடிக்கவிருக்கிறாராம். இந்த படம் யஷ் நடிக்கவிருக்கும் 19வது படமாகும்.

Related post