இறந்த ரசிகர்களின் வீடுகளுக்கு சென்ற நடிகர் யஷ்

 இறந்த ரசிகர்களின் வீடுகளுக்கு சென்ற நடிகர் யஷ்

கே ஜி எஃப் படத்தின் உலக அளவிற்கு தன் ரசிகர்கள் பட்டாளத்தை பெருக்கிக் கொண்டார் நடிகர் யஷ்.

சில தினங்களுக்கு முன் யஷ்ஷின் பிறந்தநாள் தினம் வந்தது. பல இடங்களில் அவரது ரசிகர்கள் இனிப்புகள் கொடுத்தும், பட்டாசு வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.

அப்போது, யஷ்ஷிற்காக கட்-அவுட் வைத்த போது மின்சாரம் தாக்கி அனுமந்த ஹரிஜன் (21), முரளி நடவினமணி (20), நவீன்காஜி (19) ஆகிய 3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி பலியாகினர். மேலும் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

இறந்து போன 3 ரசிகர்களின் குடும்பத்திற்கும் நேரில் சென்று அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் நடிகர் யஷ்.

ரசிகர்கள் என்னை முழுமனதாக வாழ்த்த வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே வாழ்த்துங்கள். அன்பு மனதில் இருந்தால் போதும். அதுவே எனக்கு போதுமானது. என்று கூறினார் யஷ்.

Related post