முதல்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த “தளபதி 68” படக்குழு!

 முதல்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த “தளபதி 68” படக்குழு!

விஜய் நடிக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

மிகப்பெரும் பொருட் செலவில் இப்படம் உருவாகி வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பானது சென்னையில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று படப்பிடிப்பு நிறைவடைந்தது.

முதற்கட்ட படப்பிடிப்பில் பாடல் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. ராஜு சுந்தரம் இந்த பாடலுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்பாடல் தர லோக்கல் பாடலாக உருவாகி இருக்கிறதாம்.

அடுத்தகட்ட படப்பிடிப்பானது, லியோ வெளியீட்டிற்கு பின் நடைபெறவிருக்கிறதாம். வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related post