பொங்கலுக்கு வர்ரோம்… சிவகார்த்திகேயனின் “அயலான்” ரெடி!

 பொங்கலுக்கு வர்ரோம்… சிவகார்த்திகேயனின் “அயலான்” ரெடி!

கே ஜி ஆர் தயாரிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிக நாட்களாக தயாராகி வரும் திரைப்படம் “அயலான்”.

படத்தின் படப்பிடிப்பு முடிந்த வருடங்கள் ஆன நிலையில், படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் அதிக நாட்கள் நடைபெற்று வருகின்றன.

படத்தில் ஏலியன் ஒன்று இடம்பெறுவதால், அதற்கான சிஜி பணிகள் அதிகம் என்பதால் இந்த அளவிற்கு நாட்கள் எடுத்துக் கொண்டன என்கிறது தயாரிப்பு தரப்பு.

தீபாவளிக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 2024 பொங்கலுக்கு வருகிறோம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

 

Related post