ஏ ஜி எஸ் இயக்கத்தில் மீண்டும் பிரதீப் ரங்கநாதன்

 ஏ ஜி எஸ் இயக்கத்தில் மீண்டும் பிரதீப் ரங்கநாதன்

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் அவரே நடித்து வெளிவந்த லவ் டுடே திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

சுமார் 100 கோடிக்கும் மேல் இப்படம் வசூலை வாரிக் குவித்திருந்தது. இந்நிலையில், மீண்டும் ஏ ஜி எஸ் நிறுவனத்தோடு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.

இப்படத்திற்கு டிராகன் என டைட்டில் வைத்துள்ளது படக்குழு. இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இதற்கு முன் ஓ மை கடவுளே என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

டிராகன் படத்தில் மிஸ்கின், கே எஸ் ரவிக்குமார், சித்து விலாக்ஸ் சித்து மற்றும் ஹர்ஷத் நடிக்கவிருக்கிறார்கள்.

பூஜையுடன் படப்பிடிப்பானது தொடங்கியிருக்கிறது.

 

Related post