AK 61” படத்தின் தலைப்பு இதுதானாம்.?
இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் 61வது படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் அஜித் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 90 சதவீத படப்பிடிப்பு நடைபெற்று முடிந்து விட்டதால், இறுதிகட்ட படப்பிடிப்பு படுவேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த படத்திற்கு “வல்லமை” என டைட்டில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த டைட்டில் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. இந்த டைட்டில் பெயரில் போஸ்டரும் தயார் செய்து வருகின்றனர் அஜித்குமார் ரசிகர்கள்.
விரைவில், படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெ்ளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.