600 கோடி வசூலை தாண்டி ‘அனிமல்’

 600 கோடி வசூலை தாண்டி ‘அனிமல்’

இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா நடிப்பில் கடந்த 1 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் இந்த ‘அனிமல்’.

இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஆக்‌ஷன் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரும் பலமாக பேசப்பட்டு வருகிறது. இந்த சூழலில் படம் இதுவரை சுமார் ரூ.660. 89 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படத்திற்கு நல்லதொரு வரவேற்பு கிடைத்து வருவதால் வசூல் இன்னமும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

Related post