மீண்டும் காஷ்மீர் பறந்த “லியோ” படக்குழு… படத்தில் இணைந்த மற்றொரு பிரபலம்!

 மீண்டும் காஷ்மீர் பறந்த “லியோ” படக்குழு… படத்தில் இணைந்த மற்றொரு பிரபலம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் “லியோ”.

காஷ்மீரில் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு, சென்னையை முகாமிட்டு படப்பிடிப்பை நடத்தி வந்தது.

இந்நிலையில், படக்குழுவினர் மீண்டும் காஷ்மீர் பறந்திருக்கின்றனர். முக்கியமான பிரபலம் ஒருவரை அழைத்துக் கொண்டு காஷ்மீர் பறந்திருக்கிறது இக்குழு.

பிரபல இயக்குனரான அனுராக் காஷ்யப் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

அவர் நடிக்கும் காட்சியை படமாக்குவதற்குத் தான், படக்குழு அங்கு விரைந்துள்ளதாம்.

விரைவில், படப்பிடிப்பை முடித்து வர திட்டமிட்டுள்ளது பட டீம்..

 

Related post