3 நாட்களில் 400 கோடி… வசூல் மழையில் சலார்!
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிருத்விராஜ் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் தான் சலார்.
கே ஜி எஃப் படத்திற்குப் பிறகு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகும் படம் இது என்பதால், படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியில் பட்டையை கிளப்புகிறது.
படம் வெளியாகி முதல் மூன்று நாட்களில் மட்டும் இதுவரை சுமார் 403 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது சலார்.
நிச்சயம் 1000 கோடி பாக்ஸ் ஆபீஸில் இப்படம் இணையும் என்கிறது சினிமா வட்டாரம்.