இணையத்தில் வைரலாகும் “புளூஸ்டார்” ட்ரெய்லர்

 இணையத்தில் வைரலாகும் “புளூஸ்டார்” ட்ரெய்லர்

நடிகர் அசோக்செல்வன், கீர்த்திபாண்டியன் , சாந்தனு, பிரித்வி, திவ்யாதுரைசாமி, நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் “புளூஸ்டார்”.

அறிமுக இயக்குனர் ஜெய்குமார் இயக்கியிருக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் கோவிந்த் வசந்தா, தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

இளைஞர்கள் வாழ்வில் நீங்கா இடம் பிடித்துள்ள கிரிக்கெட் மற்றும் அதைச்சுற்றி நடக்கும் நட்பு, காதல் என்று முழுக்க ஜனரஞ்சகமான படமாக உருவாகியிருக்கிறது புளூஸ்டார்.

ஜனவரி 25 ம் தேதி வெளியாகும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறது.

படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இந்த ட்ரெய்லர் பலரையும் கவரும் விதமாக ஒரு ஆழமான விளையாட்டு அரசியலை கூறி இருப்பதாக தெரிகிறது.

இந்த ட்ரெய்லர் வெளியாகி வெறும் 15 மணி நேரத்தில் 15 லட்சம் பார்வைகளை யூ டியுப் தளத்தில் மட்டுமே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related post