தக் லைஃப் படத்தில் இணைந்த மேலும் இரண்டு நட்சத்திரங்கள்!

 தக் லைஃப் படத்தில் இணைந்த மேலும் இரண்டு நட்சத்திரங்கள்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உருவாக இருக்கும் படம் தான் தக் லைஃப்.

இப்படத்தின் அறிவிப்பு வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் பெரும் வைரலானது.
ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவிருக்கிறார். கமல்ஹாசனே இப்படத்தை தயாரிக்கவும் இருக்கிறார்.

ஜெயம் ரவி, த்ரிஷா, துல்கர் சல்மான் இப்படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜோஜூ ஜார்ஜ் மற்றும் கெளதம் கார்த்திக் இருவரும் நடிக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் நட்சத்திரங்கள் சிலர் இணையவாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related post