ரிலீஸுக்கு நாள் குறித்த “சந்திரமுகி 2” டீம்!

 ரிலீஸுக்கு நாள் குறித்த “சந்திரமுகி 2” டீம்!

பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரெனாவத், வடிவேலு, ராதிகா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் தான் “சந்திரமுகி 2”.

சந்திரமுகி திரைப்படம் மிகப்பெரும் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்ததால், அதன் தொடர்ச்சியாக இப்படத்தை இயக்கியிருக்கிறார் பி வாசு.

படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், படத்தினை வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம், செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் , இதுவரை எந்த ஒரு பெரிய படங்களும் வெளியாகாததால், படத்தினை சோலோவாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது படக்குழு.

 

Related post