சந்திரமுகியோட பெஸ்ட் ப்ரண்ட் நான்… கலகலப்பான டப்பிங்கில் வடிவேலு!

 சந்திரமுகியோட பெஸ்ட் ப்ரண்ட் நான்… கலகலப்பான டப்பிங்கில் வடிவேலு!

இயக்குனர் பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரெனாவத், வடிவேலு உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் “சந்திரமுகி 2”.

ஏற்கனவே, ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி திரைப்படம் வரலாறு காணாத வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகத்தை இயக்குனர் பி வாசு இயக்கியிருக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள், டப்பிங்க் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் வடிவேலு, தனது டப்பிங்க் பணியை துவக்கியிருக்கிறார். அங்கு அவர் பேசிய டப்பிங்க் வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் ட்ரெண்டிங்க் ஆகியுள்ளது.

சந்திரமுகியோட பெஸ்ட் ப்ரண்ட் நான் என்று காமெடி கலந்து பேசும் வீடியோ வைரலாகியுள்ளது.

 

Related post