பிரபுவின் மகளை மணமுடிக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்!

த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பஹீரா, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.

கடைசியாக வெளிவந்த மார்க் ஆண்டனி சூப்பர் ஹிட் அடித்திருந்தது. அடுத்ததாக அஜித் குமாரை வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.

இந்நிலையில், நடிகர் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார்.

வரும், 13 ஆம் தேதி இவர்களது திருமணம் சென்னையில் நடைபெறவிருக்கிறது.

 

Related post