செல்வராகவன் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த முதல்வர்!

 செல்வராகவன் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த முதல்வர்!

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இயக்குனர் செல்வராகவன் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்து, அவரது குடும்பத்தினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உருவாகியிருக்கும் திரைப்படமான நானே வருவேன் வரும் வியாழன் அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், தமிழக முதல்வர் செல்வராகவன் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வந்துள்ளார். இது நட்பு ரீதியான சந்திப்பு தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு குறித்து செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எங்கள் வீட்டிற்கு வருகை தந்தது மகிழ்ச்சியான தருணம் ” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

 

Related post