குடித்துவிட்டு ரகளை… குக் வித் கோமாளியில் நடந்த அதிரடி நடவடிக்கை

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக நடந்து வருகிறது குக் வித் கோமாளி. கடந்த மூன்று சீசன்களும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், நான்காவது சீசன் கந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கியது. பல பிரபலங்கள் இந்த சீசனிலும் பங்கேற்று நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
ஜி.பி.முத்து, சிங்கப்பூர் தீபன், ரவீனா, ஓட்டேரி சிவா, சில்மிஷம் சிவா ஆகியோர் புதிய கோமாளிகளாக அறிமுகமாகியுள்ளனர்.
புதிய குக்குகளாக வலிமை படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்த ராஜ் ஐயப்பன், நடிகை விசித்திரா, நாய் சேகர் பட இயக்குநர் கிஷோர், நடிகை சிருஷ்டி டாங்கே, ஜிகர்தண்டா புகழ் காளையன், நடிகை ஷெரின், உள்ளிட்டவர்களும் பங்கேற்றுள்ளனர்.
இந்த சீசனும் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பைப் பெற்றுள்ளதால், சீசன் நன்றாகவே சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ஓட்டேரி சிவா குடித்துவிட்டு அந்த செட்டில் வந்து ரகளையில் ஈடுபட்டதாகவும், நிர்வாகம் அவரை தற்காலிக நீக்கம் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், அவருக்கு பதிலாக தங்கதுரை களத்தில் இறங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.