அரசு பதிலளிக்காதது வெட்கக்கேடானது – பா ரஞ்சித் காட்டம்!

 அரசு பதிலளிக்காதது வெட்கக்கேடானது – பா ரஞ்சித் காட்டம்!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்.பியுமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி முதல் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வந்தனர்.

போராட்டத்திற்கு எந்த வித செவியும் கொடுக்காத ஆளும் பாஜக அரசு, தொடர்ந்து எம்.பி.யின் பக்கமே நின்று வருகிறது.

இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழா நடைபெற்ற போது போலீஸார் மல்யுத்த வீரர்களை பலவந்தமாக போராட்ட களத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளானது.,

இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார் இயக்குனர் பா ரஞ்சித்.

அவர் கூறியுள்ளதாவது, ”இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்.பியுமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதிவழியில் போராடி வந்த சாக்‌சி மாலிக் மற்றும் ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள் அப்புறப்படுத்தப்பட்ட விதம் கண்டனத்துக்குரியது.

உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏற்றிய சாம்பியன்கள் எந்த வித கண்ணியமும் மரியாதையும் இல்லாமல் நடத்தப்பட்டுள்ளனர். வெற்றியாளர்கள் தங்களது பதக்கங்களை ஆற்றில் வீசும் முடிவுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அரசு பதிலளிக்காதது வெட்கக்கேடானது. இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்.பியுமான பிரிஜ்பூஷன் சரண்சிங்கை பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.” என்று கூறியுள்ளார்.

 

Related post