ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்தும் 1 ரூபாய் விவசாயிகளுக்கு தான் – விஷால்!!

 ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்தும் 1 ரூபாய் விவசாயிகளுக்கு தான் – விஷால்!!

மார்க் ஆண்டனிக்கு கிடைத்த வரவேற்பால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் விஷால். தனது மகிழ்ச்சியை வீடியோ மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,

”நான் இதைச் சொல்ல வேண்டியது என்னுடைய கடமை என்று தோணுது, ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்திற்கான ஆதரவை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.

இது ஒரு சம்பாத்தியம் மட்டுமல்ல, மக்கள் படத்தை மனதார ரசித்திருக்கிறார்கள். அதற்கு நன்றி மற்றும் எனது எதிர்கால திரைப்படங்களில் நடிக்கும்போது, இதை என் மனதில் வைத்துக் கொள்வேன், என்று அவர் அந்த வீடியோவில் கூறினார்.

மேலும் படத்தை ஆதரித்த திரையுலகினருக்கும் விஷால் நன்றி தெரிவித்ததோடு, உங்கள் சார்பாக விவசாயிகளுக்கு ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்தும் 1 ரூபாய் கொடுக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன், அதை நான் செய்வேன்.” என்று கூறியிருக்கிறார்.

Spread the love

Related post