வெளியானது ஜெயம் ரவியின் “ஜீனி” பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்

 வெளியானது ஜெயம் ரவியின் “ஜீனி” பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்

மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அர்ஜுனன், ஜெயம் ரவியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் வாமிகா, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் கீர்த்தி ஷெட்டி நாயகிகளாக நடித்து வருகின்றனர்.

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் ஐசரி கே கணேஷ் இப்படத்தை தயாரித்து வருகிறார். படத்திற்கு இசையமைக்கிறார் ஏ ஆர் ரகுமான்.

படத்தின் அநேக படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் முதல் பார்வை வெளியாகி ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பையும் பெற்று வருகிறது.

 

Related post